கொரோனா தடுப்புக்கு உதவ, மத்திய அரசின் குழு இன்று சென்னை வருகை...

May 12, 2020 09:32 AM 1041


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, அதிகம் பாதித்த 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு குழுக்களை அனுப்புகிறது. அதன் படி, தமிழகத்திற்கான மத்திய குழுவினர் இன்று சென்னை வருகின்றனர். சுனில் ஷர்மா, ரவீந்திரன், ராஜேந்திர ரத்னூ, சுஹால் தாண்டோர் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர். இந்த குழுவானது, கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில், மேலும் பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் மாநில அரசுக்கு உதவ அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த குழுவில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள் இடம் பெறுவர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வரை அவர்கள் இங்கு தங்கி தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted