பொறியியல் படிப்பிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் நிறைவு

Jun 13, 2019 07:24 AM 145

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் உள்ள பி.இ., பி.டெக்., படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே மாதம் 2 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 500க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரு லட்சத்து 72ஆயிரத்து 148 இடங்களுக்கு, மொத்தம் ஒரு லட்சத்து 33ஆயிரத்து 116 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு 7 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

ஜூன் 17 ஆம் தேதி மாணவர்களுக்கு தரவரிசை பட்டியல் இணையதளம் மூலம் வெளியிடப்படும். அதனை தொடர்ந்து ஜூலை 3 முதல் 30 ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளது.

Comment

Successfully posted