5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

May 07, 2021 01:42 PM 1089
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை வடமேற்கு திசையிலிருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால், வழக்கத்தை விட வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted