தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Aug 17, 2020 10:07 PM 313

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூறைக்காற்று வீசும் என்பதால் வங்கக்கடல், அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted