தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு!

Jul 14, 2020 01:09 PM 1474

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு புதுவை, காரைக்காலில் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஆந்திர கடலோர பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted