சந்திரசேகர ராவ் இமாலய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி

Dec 11, 2018 10:27 PM 233

தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ், இமாலய வெற்றியை பெற்றுள்ளது.

119 உறுப்பினர்கள் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை பிடிக்க 60 இடங்கள் தேவை. முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 85 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணி 21 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க 3 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் மீண்டும் தெலங்கானா முதலமைச்சராக சந்திரசேகர ராவ் பதவி ஏற்பது உறுதியாகியுள்ளது.

Comment

Successfully posted