டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம்

Feb 11, 2019 09:34 AM 90

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதற்கு மத்திய அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை என கூறி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய சந்திரபாபு, இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார்.

இந்நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தை டெல்லியில் அவர் தொடங்கியுள்ளார். முன்னதாக, டெல்லியில் உள்ள ராஜ்காட்டுக்கு சென்ற அவர் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

Comment

Successfully posted