மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாத மோடி எதற்காக ஆந்திரா வருகிறார்: சந்திரபாபு நாயுடு

Dec 27, 2018 11:06 AM 178

ஆந்திர மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாத பிரதமர் மோடி ஆந்திரா வருவது எதற்காக என மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆந்திரா மாநிலம் அனந்தபூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சந்திரபாபு நாயுடு, எந்த முகத்துடன் பிரதமர் மோடி ஆந்திரா வருகிறார் என்பது தனக்கு புரியவில்லை என்று தெரிவித்துள்ளார். தாங்கள் உயிருடன் இருக்கிறோமா இல்லையா என்பதை பார்க்க வருகிறாரா? என அவர் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி ஆந்திரா வருவதை அனைத்து மக்களும் எதிர்ப்பதாகவே எனக்கூறி சந்திரபாபு நாயுடு, ஆந்திரா மறுசீரமைப்பு சட்டத்தை மோடி அமல்படுத்தினால், அவர் இங்கு வருவதில் தங்களுக்கு ஆட்பேசனை இல்லை என்றார். ஜனவரி 6-ம் தேதி பிரதமர் மோடி ஆந்திரா செல்ல உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted