சென்னை புறநகர் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

Apr 21, 2021 08:23 AM 355

தமிழக அரசு அறிவித்துள்ள இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு காரணமாக சென்னை ரயில்வே கோட்டம், புறநகர் ரயில் சேவையில் சில மாற்றங்களை செய்துள்ளது.

அதன் விவரம் கீழ்வருமாறு:

வார நாட்கள் ( திங்கள் - சனி) 

1)சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் = 150 சேவைகள்

2) சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி/ சூலூர்பேட்டை மார்க்கம் = 64 சேவைகள்

 

3) சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கம் = 68 சேவைகள்

4) சென்னை கடற்கரை - தாம்பரம் / செங்கல்பட்டு/ திருமால்பூர் மார்க்கம் = 152 சேவைகள்.

என மொத்தம் 434 புறநகர் ரயில் சேவைகள் வார நாட்களில் இயக்கப்படும்.

 

ஞாயிற்றுக்கிழமைகளில்:

1)சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கம் = 32 சேவைகள்

2) சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை மார்க்கம் = 24 சேவைகள்

 

3) சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கம் = 12 சேவைகள்

4) சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கம் = 18 சேவைகள்.

என மொத்தம் 86 புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும்.

 

 

இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை எந்த ஒரு ரயில் முனையத்திலிருந்தும் புறநகர் ரயில் புறப்பாடு இருக்காது.

இந்த திருத்தப்பட்ட புறநகர் ரயில் சேவைகளுக்கான புதிய கால அட்டவணை நாளை (22.04.2021) வியாழக்கிழமை முதல் அமல்படுத்தப்படுகிறது .

Comment

Successfully posted