செம்பரம்பாக்கம் ஏரி இன்று திறப்பு!

Dec 03, 2020 11:56 AM 514

செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று நண்பகல் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஏரியில் இருந்து இரண்டாவது முறையாக இன்று நண்பகல் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதல்கட்டாக விநாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ள ஆட்சியர், காவலூர், குன்றத்தூர், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியின் நீர் திறப்பை கண்காணிக்கவும் அறிவுறுத்தி உள்ளதாக ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

Comment

Successfully posted