செம்பரம்பாக்கம் நீர் திறப்பு உயர்வு!

Jan 07, 2021 09:31 AM 3555

தொடர் மழையால், நீர்வரத்து அதிகரித்ததால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரத்து 932 கன அடியாக உயர்ந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 2 ஆயிரத்து 82 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதனால், ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரத்து 932 கன அடியாக உயர்த்தப்பட்டது. தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில், நீர் வெளியேற்றம் அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Comment

Successfully posted