கிராமத்தைச் சூழ்ந்த மழை வெள்ளம்-பொதுமக்கள் கடும் அவதி

Nov 30, 2021 07:07 PM 745

செங்கல்பட்டு மாவட்டத்தில், கிராமத்தைச் சூழ்ந்த மழை வெள்ளம், 4 நாட்களாக தேங்கியுள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்...

வடகிழக்கு பருவ மழை காரணமாக, செங்கல்பட்டின் சுற்று வட்டார ஏரிகள் நிரம்பி வெளியேறிய உபரி நீர், செங்கல்பட்டு, வல்லம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நான்கு நாட்களாக தேங்கியுள்ளது. விடாத மழையால், எங்கு பார்த்தாலும் தண்ணீர் இருப்பதால், பொதுமக்கள் பெருமளவில் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

செங்கல்பட்டை அடுத்த வடகால் கிராமத்தில், மழை வெள்ளம் சூழ்ந்ததால், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 நாட்கள் ஆகியும் வெள்ளத்தை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், கால்வாயை அகலப்படுத்தித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted