சென்னையில் 2 மணி நேரம் பெய்த மழைக்கே சாலைகளில் தேங்கிய மழைநீர்

Nov 22, 2021 04:35 PM 712

சென்னையில் அதிகாலை 2 மணி நேரம் பெய்த மழைக்கே சாலைகளில் வெள்ளநீர் தேங்கியதால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

சென்னையில் கடந்த 3 நாட்களாக பெரிய அளவில் மழை இல்லாத நிலையில், இன்று அதிகாலை பரவலாக மழை பெய்தது. தியாகராய நகர், சூளைமேடு, கோடம்பாக்கம், வடபழநி, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

image

இரண்டு மணி நேர மழைக்கே தாக்கு பிடிக்க முடியாமல் தியாகராய நகர், வடக்கு உஸ்மான் சாலை மற்றும் மேற்கு மாம்பலம் செல்லும் மேம்பாலம் அருகே மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

இதேபோல் வள்ளுவர் கோட்டத்தில் இருந்து திருமலை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை இணைக்க கூடிய சாலைகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. வெள்ள நீர் சற்று வடிந்த நிலையில் மீண்டும் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

 

Comment

Successfully posted