சென்னை அண்ணாசாலை இருவழிச்சாலையானது

Sep 11, 2019 12:25 PM 64

சென்னை அண்ணா சாலையில் ஜி.பி.சாலை முதல் ஒயிட்ஸ் சாலை வரையிலான ஒரு வழிச்சாலை, ஏழு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இருவழிப் பாதையாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

2012 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் பணிகளுக்காக சென்னை அண்ணா சாலையில் ஜி.பி.சாலை முதல் ஒயிட்ஸ் சாலை வரை ஒரு வழிச் சாலையாக மாற்றப்பட்டது. இந்நிலையில் மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்ததால் அந்த சாலை மீண்டும் இருவழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா போக்குவரத்தினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெற்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் எழிலரசன், 7 ஆண்டுகளுக்கு பிறகு இருவழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்களுக்கு சோதனை ஓட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். ஒரு வழிச்சாலை இருவழிச் சாலையாக மாற்றப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comment

Successfully posted