அதிமுக அரசால் மத்திய அரசின் விருதை பெற்ற சென்னை மாநகராட்சி

Jun 28, 2021 05:09 PM 716

அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நீர்நிலைகள் புனரமைப்பு காரணமாக சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பதாக மாநகாரட்சி தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் நீர்நிலைகள் மீட்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், நதிகள் புணரமைப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் சென்னையில் உள்ள 210 நீர்நிலைகளில் 141 நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டன. நீர்நிலைகள் மீண்டும் ஆக்கிரமிக்கப்படாத வகையில் சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்டன. இதனால் சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் 4 புள்ளி 35 டி.எம்.சியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நீர்நிலைகள் புனரமைக்கும் பணிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்பட்டதாலேயே சென்னை மாநகராட்சிக்கு மத்திய அரசின் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Comment

Successfully posted