தனியார் கல்வி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை : சென்னை உயர்நீதிமன்றம்!!

Jul 31, 2020 05:31 PM 1366

நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடப்பு கல்வியாண்டிற்கான கட்டணம் இறுதி செய்யப்படாததால் சென்ற ஆண்டு வசூலித்த கட்டணத்தின் அடிப்படையில் 40 சதவீத தொகையை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் வசூலிக்கவும், மீதமுள்ள 35 சதவீத தொகையை பள்ளிகள் திறந்த 2 மாதங்களுக்குள் வசூலிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி, பள்ளிகள் முழு கட்டணத்தை வசூலிப்பதாக, தமிழக அரசு வழக்கறிஞர் நீதிபதியிடம் முறையிட்டார். நீதிமன்ற உத்தரவை மீறும் பள்ளிகள், கல்லூரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்து, அதன் விவரங்களை ஆகஸ்ட் 17ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நீதிமன்ற உத்தரவை மீறி முழு கட்டணம் வசூலித்த பள்ளி, கல்லூரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

Comment

Successfully posted