சென்னை வளசரவாக்கத்தில் காலாவதியான பன்னாட்டு குளிர்பானங்கள்

Sep 11, 2019 12:30 PM 76

சென்னை வளசரவாக்கத்தில் காலாவதியான பன்னாட்டு குளிர்பானங்கள் கொட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வளசரவாக்கம் அன்பு நகர் பத்தாவது தெருவில் நேற்று இரவு காலாவதியான குளிர்பானங்களை மர்ம நபர்கள் கொட்டி விட்டு சென்றுள்ளனர். இவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மழைக்காலம் என்பதால் தொற்று நோய் பரவக்கூடிய அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். காலாவதியான குளிர்பானங்களை கொட்டியவர்கள் யார் என்று கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted