வீட்டினருகே நிறுத்தப்பட்ட கார், ஆட்டோ, இருசக்கர வாகனம்-சேதத்திற்கு காரணம் முன்விரோதமா??

Jun 24, 2021 03:40 PM 414

சென்னை கோயம்பேட்டில் அதிமுக நிர்வாகியின் காரை மர்ம கும்பல் அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

image

சென்னை கோயம்பேடு மாதா கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் அதிமுக வட்ட துணை செயலாளராக உள்ளார். நேற்று இரவு இவரது வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார், இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றது. இது குறித்து மணிகண்டன் கோயம்பேடு காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

image

அரசியல் முன் விரோதம் காரணமாக அதிமுக நிர்வாகியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
imageComment

Successfully posted