சென்னை திரைப்பட விழாவில் குவியும் ரசிகர்கள்

Dec 19, 2019 09:56 PM 579

சென்னை திரைப்பட விழாவில் சினிமா ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால் ஏராளமானோர் திரையரங்க தரையில் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்தனர்.

சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 12ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. 8 நாட்களாக நடைபெற்று வந்த திரைப்படவிழா இன்று நிறைவடைந்தது. சென்னையில் தேவி தியேட்டர், கேசினோ, அண்ணா, ரஷ்யன் கலாச்சார மையம் உள்ளிட்ட திரையரங்குகளில்  சர்வதேசபடங்கள் திரையிடப்பட்டன. இந்நிலையில், சென்னை அண்ணா தியேட்டரில் திரையிடப்பட்ட நார்வே நாட்டு திரைப்படமான சைக்கோ பிச் என்ற காதல் திரைப்படத்தை பார்க்க கூட்டம் அலைமோதியதை அடுத்து திரை அரங்கம் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. இதனால் சினிமா ரசிகர்கள் தரையில் அமர்ந்து  திரைப்படத்தை  பார்த்து ரசித்தனர்.

Comment

Successfully posted