சென்னை கல்லூரி மாணவர்கள் மோதல் சம்பவம் : மேலும் ஒரு மாணவர் கைது

Jul 25, 2019 03:55 PM 104

சென்னை பச்சையப்பன் கல்லூரி சக மாணவர்களை அரிவாளால் வெட்டியது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் ரவி வர்மா என்கிற மற்றொரு மாணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொன்னேரியை சேர்ந்த ஸ்ருதி மற்றும் பெரியபாளையத்தைச் சேர்ந்த மதன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இந்தநிலையில், செங்குன்றத்தை சேர்ந்த வசந்தகுமார் என்ற மாணவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே இரண்டு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், வசந்தகுமார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comment

Successfully posted