திமுக பிரமுகர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி ரெய்டு

Nov 17, 2021 06:51 PM 1962

வரி ஏய்ப்பு தொடர்பான புகாரில், சென்னையில் திமுக பிரமுகர்களுக்கு சொந்தமான கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை அரும்பாக்கம் பகுதியில் வசந்தம் ப்ரமோட்டர்ஸ் என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருபவர் ஜவஹர். இவரது அலுவலகத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 6க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

image

ரியல் எஸ்டேட் அதிபரான ஜவகர், கடந்த 2017ஆம் ஆண்டு "பயமா இருக்கு" என்கிற திரைப்படத்தை தயாரித்து இயக்கியும் உள்ளார். இவர்அண்ணா நகர் திமுக எம்.எல்.ஏ மோகனுக்கு நெருக்கமானவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேப்போல சென்னை மேற்கு அண்ணா நகர் பகுதியில் மகாலட்சுமி பில்டர்ஸ் என்கிற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் சென்னை கிழக்கு பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளர் லோகேஷூக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். லோகேஷ் திமுக அமைச்சர் சேகர் பாபுவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

இந்த இரண்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான அலுவலகம் மற்றும் வீடுகள் என மொத்தம் எட்டு இடங்களில், சோதனை நடைபெற்று வருகிறது.

 

Comment

Successfully posted