சென்னை மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு! - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Feb 20, 2021 04:24 PM 2531

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான கட்டணத்தை குறைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மெட்ரோ ரயில் சேவையை பெருவாரியான பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம், கட்டணம் குறைக்கப்பட வேண்டுமென்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

அதன்படி, 2 கிலோ மீட்டர் தொலைவு வரையிலான கட்டணத்தில் மாற்றமில்லாமல் 10 ரூபாயாகவும்

2 முதல் 5 கிலோ மீட்டர் வரையிலான தொலைவுக்கு கட்டணம் 20 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

5 முதல் 12 கிலோ மீட்டர் வரையிலான தொலைவுக்கு கட்டணம் 30 ரூபாயாகவும்,

12 முதல் 21 கிலோ மீட்டர் வரையிலான தொலைவுக்கு கட்டணம் 40 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

21 முதல் 32 கிலோ மீட்டர் வரையிலான தொலைவுக்கு கட்டணம் 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, QR கோடு பயன்படுத்துபவர்களுக்கு அடிப்படை கட்டணத்தில் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் 50 சதவிகிதம் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

45 கிலோமீட்டர் தொலைவுக்கான முதல்கட்ட வழித்தடத்திற்கு வசூலிக்கப்படும் 100 ரூபாய் கட்டணம், விம்கோ நகர் வரை நீட்டிக்கப்பட்ட 54 கிலோமீட்டர் தொலைவுக்கான கட்டணமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டணம் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 

Comment

Successfully posted