சென்னை குடிசைவாழ் மக்களுக்கு இலவச உணவு!

Dec 06, 2020 06:45 AM 278

சென்னையில் உள்ள குடிசைவாழ் மக்களுக்கு, இன்று முதல் 13ஆம் தேதி வரை, 3 வேளையும் உணவு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கனமழையால் வாழ்வாதாரம் இழந்துள்ள சுமார் 26 லட்சம் குடிசைவாழ் மக்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதன்மூலம், சுமார் 5 லட்சம் குடும்பங்களுக்கு, சுத்தமான, ஆரோகியமான உணவு வழங்கப்பட உள்ளது. இன்று காலை உணவு, தொடங்கி, 13ஆம் தேதி இரவு உணவு, வரை, வழங்க ஏற்பாடுகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted