சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

Oct 15, 2019 06:25 PM 118

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை சார்பில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி அஜய்குமார் குகர், ப.சிதம்பரத்தை நீதிமன்றத்தில் வைத்து அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி வழங்கினர். திகார் சிறையில், நாளை சிதம்பரத்திடம் 30 நிமிடங்கள் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திக் கொள்ளலாம் எனவும், விசாரணைக்கு பிறகு தேவைப்பட்டால் சிதம்பரத்தை கைது செய்து கொள்ளலாம் எனவும் நீதிபதி அஜய்குமார் குகர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், ப.சிதம்பரத்தை நீதிமன்றத்தில் வைத்து விசாரிக்க அவர் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted