நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் தலைமைக் காவலர் சுப்பிரமணியன் பலி!

Aug 18, 2020 10:01 PM 793

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே, ரவுடியை பிடிக்கச் சென்ற காவலர் ஒருவர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த ரவுடி துரைமுத்து மீது இரட்டை கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கொலை செய்ய துரைமுத்து ஆயுதங்களுடன் சுற்றித் திரிவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், அவரை பிடிக்க காவல்துறையினர் சென்றுள்ளனர். அப்போது, காவலர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டதில், படுகாயமடைந்த காவலர் சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, காவலரின் உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், காயமடைந்த மற்றொரு காவலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் காவலரை கொலை செய்த ரவுடி துரைமுத்துவும் இறந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Comment

Successfully posted