தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்கும் அமர்விலிருந்து நீதிபதி ரமணா விலகல்

Apr 25, 2019 05:32 PM 81

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்கும் அமர்விலிருந்து நீதிபதி ரமணா விலகுவதாக அறிவித்துள்ளார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் பணியாளர் தொடுத்த பாலியல் புகார் குறித்து நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா, மற்றும் இந்திரா பானர்ஜி அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வில் நீதிபதி என்.வி.ரமணா இடம்பெற்றிருப்பதற்கு முன்னாள் பெண் பணியாளர் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்கும் அமர்விலிருந்து நீதிபதி என்.வி.ரமணா வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு அவர் கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

Comment

Successfully posted