உயிர்களை காப்பாற்றும் எண்ணத்தில் முதலமைச்சர் நடவடிக்கை - அமைச்சர் கே.சி.வீரமணி

Apr 09, 2020 01:34 PM 1382

ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டுவருவதாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட  ரயில் நிலையம், பார்சம்பேட்டை உள்ளிட்ட 18 வார்டுகளில் நடைபெற்று வரும் கிருமி நாசினி தெளிப்பு பணிகளை அமைச்சர் வீரமணி ஆய்வு செய்தார். பார்சம்பேட்டை பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கிய அமைச்சர், நடமாடும் காய்கறி சந்தை மூலம் 100 ரூபாய்க்கு 14 வகையான காய்கறிகளை விற்பனை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, கொரோனா நோய் தடுப்பு பணியில் தூய்மைப்பணியாளர்கள் தங்களை உணர்வு பூர்வமாக ஈடுபடுத்தி செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

Comment

Successfully posted