முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்றைய பிரசாரம்!

Apr 03, 2021 06:47 AM 508

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருப்பத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் நடைபெறும் பிரசார கூட்டத்தில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிக்கிறார்.

சேலம் மாவட்டம் மேச்சேரி நடைபெறும் கூட்டத்தில், மேட்டூர் தொகுதி பாமக வேட்பாளர் சதாசிவத்தை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

பின்னர், எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான குட்டப்பட்டி, நங்கவள்ளி ஒன்றியம் ஆகிய இடங்களில் முதலமைச்சர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபடுகிறார்.

இதனைத் தொடர்ந்து, ஓமலூரில் அதிமுக வேட்பாளர் R.மணியை ஆதரித்து முதலமைச்சர் வாக்குசேகரிப்பில் ஈடுபடுகிறார்.

இதே போல், தேனி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருக்கிறார்.

Comment

Successfully posted