சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தீவிர பிரசாரம்!

Mar 29, 2021 07:05 AM 452

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட இருக்கிறார்.

அதன்படி, மயிலாப்பூர், தியாகராய நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், மதுரவாயல், பூந்தமல்லி, அம்பத்தூர் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். அப்போது, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் வாக்குசேகரிப்பில் ஈடுபடுகிறார். இதே போன்று, போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட இருக்கிறார்.


 

 

Comment

Successfully posted