இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறையில் சென்னை தலைநகராக விளங்குகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Oct 11, 2018 08:48 AM 639

இந்தியாவில் தகவல் தொழில் நுட்பத்துறையில் சென்னை தலைநகராக விளங்குகிறது என்று சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை மணப்பாக்கத்தில் தொழில்நுட்ப கூட்டமைப்பின் தகவல் தொழில் நுட்ப மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவில் தொழில் முதலீட்டாளர்களின் சிறந்த மாநிலங்களின் பட்டியலில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் திறமையான மற்றும் வலிமையான ஆட்சி நடைபெற்று வருவதால் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருவதாக அவர் கூறினார். டிஜிட்டல் பொருளாதாரம் மூலம் மூன்றாம் தொழில் புரட்சி ஏற்படும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது தமிழகத்தில் தகவல் மற்றும் வேளாண் தொழில்நுட்ப துறையில் முதலீடு அதிகரித்துள்ளதாகவும் மாநாட்டில் முதலமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் தொழில்வளம் மேலும் பெருகும் என்பது உறுதி என்றும் அவர் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted