முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயண விவரம்!

Jan 05, 2021 09:46 AM 1623

ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியில் வரும் 6ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்று உரையாற்றுகிறார். அன்று காலை10 மணிக்கு கே.எம்.பி மஹாலில் சிறு, குறு தொழில் முனைவோருடன் கலந்துரையாடுகிறார். முற்பகல் 11 மணிக்கு அந்தியூரில் பொதுக்கூட்டத்திலும், நண்பகல் 12 மணிக்கு வாரி மஹாலில் வெற்றிலை கொடி விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் பங்கேற்கிறார். பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை அத்தாணி, கள்ளிப்பட்டி, நால்ரோடு, சத்தியமங்கலத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார். மாலை 4.45 மணிக்கு நல்லூரில் உள்ளூர் பிரமுகர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார். மாலை 5.30 மணிக்கு பு.புளியம்பட்டியில் வரவேற்பு நிகழ்ச்சியிலும், மாலை 6.30 மணியளவில் உள்ளூர் பிரமுகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் பங்கேற்கிறார். இரவு 7 மணிக்கு நம்பியூரில் வரவேற்பு நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு கோபிச்செட்டிபாளையத்தில் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

தொடர்ந்து ஜனவரி 7ம் தேதி காலை 9 மணியளவில் பன்னீர்செல்வம் பார்க்கில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். காலை 9.30 மணியளவில் ஈரோட்டில் மாவட்ட கழக அலுவலகம், பாசறை நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார். காலை 10 மணியளவில் மாரியம்மன் கோயில் வீரப்பன் சத்திரத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று முதலமைச்சர் உரையாற்றுகிறார். முற்பகல் 11.30 மணியளவில் தேநீர் விருந்து நிகழ்ச்சியிலும், நண்பகல் 12 மணிக்கு சித்தோடு பகுதியில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் பங்கேற்கிறார். தொடர்ந்து நண்பகல் 12:30 மணிக்கு வில்லரசம்பட்டியில் THE WAFER RESORT-ல் தொழில் முனைவோர், வழக்கறிஞர்கள், மருத்துவர்களுடன் கலந்துரையாடுகிறார். பிற்பகல் 2:30 மணி முதல் 3:15 மணி வரை ஊத்துக்குளி, சென்னிமலையில் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். மாலை 4 மணிக்கு ஓடாநிலை பகுதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முதலமைச்சர், மஞ்சள் விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். மாலை 4.45 மணிக்கு அரசலூரில் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடும் முதலமைச்சர், 5:30 மணிக்கு அவல்பூந்துறையில் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 6:30 மணியளவில் பெருந்துறையில் கைத்தறி மற்றும் சக்தி தறி தொழில் முனைவோர், உள்ளூர் பிரமுகர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் இரவு 7:30 மணியளவில் பெருந்துறையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று வாக்குசேகரிக்கிறார்.

Comment

Successfully posted