மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் நேர்முக உதவியாளர் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

Nov 07, 2018 03:03 PM 622

கடலூர் அருகே கார் விபத்தில் உயிரிழந்த, அமைச்சரின் நேர்முக உதவியாளர் லோகநாதன் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் சிறப்பு நேர்முக உதவியாளராக இருந்த லோகநாதன் மற்றும் அவரது மகன்கள் இருவர் உள்பட 3 பேரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.

இந்நிலையில் லோகநாதன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

லோகநாதன் மற்றும் அவரது மகன்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ள முதலமைச்சர், அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted