முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சூறாவளி பிரசாரம்!

Mar 21, 2021 08:59 AM 3167

திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட இருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, செய்யார், ஆரணி, போளூர், கலசப்பாக்கம், செங்கம் ஆகிய பகுதிகளிலும்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி ஆகிய பகுதிகளிலும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்கிறார்.

Comment

Successfully posted