தென்காசியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று 2வது நாளாக பிரசாரம்!

Feb 19, 2021 06:19 AM 3141

தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2வது நாளாக இன்று சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.

கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளில் முதலமைச்சர் இன்று பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். காலை 10 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர், கடையநல்லூர் பள்ளிவாசல் அருகே பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். பின்னர் நாங்குநேரி தொகுதி, புளியங்குடியில் உள்ள கண்ணா திரையரங்க வளாகத்தில், மகளிர் சுய உதவிக் குழுவினருடன் கலந்துரையாடுகிறார். இதனைத் தொடர்ந்து, சங்கரன்கோவில் தொகுதியில் வைஷ்ணவி மஹாலில், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடுகிறார். 

 

Comment

Successfully posted