ஹர்ஷ்வர்தனுக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்!!!

May 23, 2020 07:47 AM 888

உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு தலைவராக, நேற்று பொறுப்பேற்றார். காணொலி மூலம் பொறுப்பேற்ற அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஹர்ஷ்வர்தனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு தலைவராக பொறுப்பேற்று இருப்பது பெருமை அளிக்கக் கூடிய ஒன்றாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் நிர்வாக குழு தலைவராக நேற்று பொறுப்பேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, துணை முதலமைச்சர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உலக சுகாதார அமைப்பான WHOவின் நிர்வாக வாரிய தலைவராக உயரிய பொறுப்பில், நமது இந்திய திருநாட்டிலிருந்து, மாண்புமிகு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் நியமிக்கப்பட்டுள்ளது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், டாக்டர் ஹர்ஷ்வர்தனுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted