மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை!

Aug 06, 2020 09:46 PM 711

மகளிர் சுய உதவிக்குழுவினர் கொரோனாவைக் கட்டுப்படுத்த அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாலிக்கு தங்கம், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்கள் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சைக்கிள் உள்ளிட்ட விலையில்லா திட்டங்கள் மூலம் கிராமப்புற மாணவர்கள் கல்வித்தரம் உயர்திருப்பதாகவும் கூறினார். உழைக்கும் மகளிருக்கு மதுரை மாவட்டத்தில் மட்டும் 9 ஆயிரத்து 329 பேருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது மதுரைக்கு பெருமை எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Comment

Successfully posted