20 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து பரப்புரை செய்த முதலமைச்சர் பழனிசாமி!

Apr 04, 2021 06:19 PM 1038

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பம்பரமாக சுழன்று, 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, 250க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

சட்டமன்றப் பொதுத்தேர்தலையொட்டி, கடந்த டிசம்பர் 29ம் தேதி நாமக்கல்லில் சூறாவளி தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். தொகுதி வாரியாக மக்களை நேரில் சந்தித்து, அதிமுக அரசு செயல்படுத்திவரும் மக்கள் நலத்திட்டங்களையும், சாதனைகளையும் பட்டியலிட்டு ஆதரவு திரட்டினார். இதுவரை 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, 234 தொகுதிகளிலும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். சுமார் 250 இடங்களில், மக்களை நேரில் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சர் கடந்த 2 நாட்களாக, சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் வாக்கு சேகரித்தார். தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இன்று முதலமைச்சர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

Comment

Successfully posted