கேரளாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார் முதலமைச்சர் பினராயி விஜயன்

Aug 13, 2019 01:19 PM 101

கேரளத்தில், வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில் மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் விமானத்தில் சென்று பார்வையிட்டார்.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஆகஸ்டு 8 முதல் 12 ம் தேதி வரை தொடர்ந்து மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிலும், நிலச்சரிவிலும் சிக்கி 85 பேர் உயிரிழந்ததாகவும், 53 பேரைக் காணவில்லை என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. தற்போது ஓரளவு மழை குறைந்துள்ள நிலையில், மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், வயநாடு, மலப்புரம் மாவட்டங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தில் சென்று பார்வையிட்டார்.

Comment

Successfully posted