தீரன் சின்னமலைக்கு தமிழக அரசு சார்பில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மரியாதை!

Aug 02, 2020 11:18 AM 612

சுதந்திர போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின், 216-வது நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல், தீரன் சின்னமலையின் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மணிமண்டபத்தில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், சிவசுப்பிரமணி, தென்னரசு, தோப்பு வெங்கடாசலம், ராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் சமூக இடைவெளியை கடைபிடித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுதந்திர போராட்ட வீரர்களை பெருமைப்படுத்துவதில் தமிழக அரசு சிறந்து விளங்குவதாக பெருமிதம் தெரிவித்தார்.

Comment

Successfully posted