அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றித் தந்துள்ளது: முதலமைச்சர்

Apr 09, 2019 06:13 PM 192

மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றித் தந்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம். தியாகராஜனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், அப்பகுதி மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாதி திட்டத்தை, அதிமுக அரசு நிறைவேற்றித் தந்துள்ளதாக தெரிவித்தார். தான் ஒரு விவசாயி என்பதால், நீரின் அவசியம் குறித்து நன்கு அறிந்துள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.

திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டுப்பட்டு தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாக தெரிவித்தார். 

Comment

Successfully posted