கால்நடை பூங்கா கட்டுமான பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார்!

Jun 28, 2020 07:14 PM 781

தமிழக அரசை குறை கூறி அறிக்கை வெளியிடுவதையே வேலையாக வைத்திருக்கும் ஸ்டாலின்,கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக என்ன யோசனை கூறியிருக்கிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு வரும் கால்நடை பூங்கா கட்டுமான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், ஆயிரத்து 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 102 ஏக்கர் பரப்பளவில், கால்நடை மருத்துவக்கல்லூரியுடன் கால்நடை ஆராய்ச்சி மையமும் அமைக்க கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமானப்பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தபோது, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

Comment

Successfully posted