தமிழகத்தின் மீது முதலமைச்சருக்கு அதீத அக்கறை உள்ளது: அமைச்சர்

Nov 18, 2019 08:34 PM 170

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற முதலமைச்சரின் குறைதீர்க்கும் முகாமில் 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார்.

தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம் மூலம் வீட்டுமனைப் பட்டா, தையல் இயந்திரம் உள்பட 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், தமிழகத்தின் மீது முதலமைச்சர் பழனிசாமி அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும், மக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறினார்.

Comment

Successfully posted