ஹஜ் ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Feb 12, 2019 06:34 PM 151

தமிழகத்திற்கான ஹஜ் ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், 2019 ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள, 6379 பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் 3534 இடங்கள் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கூடுதலாக 1500 இடங்கள் ஒதுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Comment

Successfully posted