நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்று வரும் எம்எல்ஏவை நேரில் சந்தித்த முதலமைச்சர்

Feb 12, 2020 05:44 PM 93

நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுருவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினராகவும், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள குமரகுரு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெஞ்சு வலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவமனைக்கு நேரில் சென்று குமரகுருவிடம் உடல்நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின் போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், தமிழக உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Comment

Successfully posted