கேரள முதல்வர் விரைவில் தமிழக முதல்வரை சந்திக்கவுள்ளார் -அமைச்சர் கே.சி.கருப்பணன்

Jan 24, 2020 06:38 PM 461

நதிநீர் பிரச்சனை தொடர்பாக கேரள முதல்வர் விரைவில் சென்னை வந்து தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாக தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் வந்துள்ள கேரள சுற்றுலாத்துறை அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், தமிழக அமைச்சர்கள் கே.சி.கருப்பணன், பாண்டியராஜன் ஆகியோரை தலைமைச் செயலகத்தில் சந்தித்துபேசினார்.. அப்போது பேசிய அமைச்சர் கருப்பணன் , கேரள முதல்வர் விரைவில் சென்னை வந்து தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாக கூறினார்..

Comment

Successfully posted