நீலகிரி மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் நாளை அடிக்கல்!!

Jul 09, 2020 01:01 PM 432

நீலகிரியில் புதிதாக அமைய உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் 25 ஏக்கர் பரப்பளவில், 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமையவுள்ளது. 60 சதவீதம் மத்திய அரசின் நிதிப்பங்களிப்புடனும், 40 சதவீதம் மாநில அரசின் நிதிப்பங்களிப்புடனும் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அமைகிறது. நீலகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார். இந்த புதிய மருத்துவக் கல்லூரி மூலம் கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கும்.

Comment

Successfully posted