விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க முதலமைச்சர் வேண்டுகோள்

Jan 18, 2020 09:33 AM 135

 

 'விபத்தில்லா தமிழ்நாடு' என்ற இலக்கினை எட்ட, மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

31-ஆவது சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி முதலமைச்சர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நாளை முதல் ஒரு வாரத்திற்கு கடைபிடிக்கப்படுவதை குறிப்பிட்டுள்ளார். சாலை பாதுகாப்பு வார விழாவில் தலைக்கவசம், சீட்பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல், மாணவ, மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்து போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 2016-ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, 2019-ஆம் ஆண்டில் சாலை விபத்துகள் 26 புள்ளி 60 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் 43 புள்ளி 10 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

108 ஆம்புலன்ஸ்கள் விபத்து ஏற்படும் இடங்களுக்கு விரைவாக சென்று சேவை புரிவதால் உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

'விபத்தில்லா தமிழ்நாடு' என்ற இலக்கினை எட்ட, மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Comment

Successfully posted