அரியலூரில் புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரிக்கு நாளை முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்!!

Jul 06, 2020 02:05 PM 485

அரியலூர் மாவட்டத்தில் புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார். 

அரியலூரில் 10 புள்ளி 83 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைய உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் நாளை அடிக்கல் நாட்டுகிறார். 347 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரிக்கு, 60 சதவீத நிதியை மத்திய அரசும், 40 சதவீத நிதியை மாநில அரசும் வழங்குகின்றன. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 49 மருத்துவக் கல்லூரிகளில் 7 ஆயிரத்து 150 இடங்கள் உள்ள நிலையில், புதிதாக அமைக்கப்படும் அரியலூர் மருத்துவக் கல்லூரி மூலம் கூடுதலாக 150 இடங்கள் கிடைக்கும். முன்னதாக, கள்ளக்குறிச்சியில் 381 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Comment

Successfully posted