பொள்ளாச்சி ஆழியாறு அணையில் நீர் திறக்க முதல்வர் உத்தரவு

Oct 11, 2018 04:05 AM 432

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து ஆழியார் அணையில் இருந்து வினாடிக்கு 320 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. நிகழ்ச்சியில் சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் மூலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய், சேதுமடை கால்வாய் , பீடர் கால்வாய் வழியாக 22 ஆயிரத்து 116 ஏக்கர் நிலங்கள் பாசனம்  பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted