முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சூறாவளி பிரசாரம்!

Mar 31, 2021 06:43 AM 591

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இன்று அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வேளச்சேரி தொகுதி அதிமுக வேட்பாளர் அசோக், சோழிங்கநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் K.P.கந்தன், தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் T.K.M. சின்னய்யா ஆகியோரை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும், பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பார் சிட்லபாக்கம் ராசேந்திரன், ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளர் பாண்டியராஜன், கும்மிடிப்பூண்டி தொகுதி பா.ம.க. வேட்பாளர் பிரகாஷ் ஆகியோருக்கு ஆதரவு திரட்டுகிறார். இதனைத் தொடர்ந்து, பொன்னேரி தொகுதி அதிமுக வேட்பாளர் சிறுணியம் பலராமன், மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மாதவரம் வி.மூர்த்தி, ஆலந்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பா.வளர்மதி ஆகியோருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.Comment

Successfully posted